உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீகார் பொறியாளருக்கு ஜாக்பாட்: ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் கூகுள் வேலை

பீகார் பொறியாளருக்கு ஜாக்பாட்: ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தில் கூகுள் வேலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீகாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு லண்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்து உள்ளது. வரும் அக்., மாதம் அவர் பணியில் சேர உள்ளார்.பீஹாரின் ஜமுயி மாவட்டத்தை சேர்ந்தவர் இந்திரதேவ். வழக்கறிஞர். மனைவி மஞ்சு தேவி. இவர்களின் மகன் அபிஷேக் குமார். ஆரம்ப கல்வியை அங்கேயே முடித்த இவர், பாட்னாவில் உள்ள என்.ஐ.டி.,யில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்தார். படித்து முடித்ததும் 2022ம் ஆண்டு ஆண்டுக்கு ரூ.1.08 கோடி சம்பளத்தில் அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்தது. 2023ம் ஆண்டு வரை அங்கேயே பணியாற்றிய அவர், ஜெர்மனியில் உள்ள பன்னாட்டு முதலீட்டு நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இருப்பினும் கூகுளில் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கம் இருந்து வந்தது. பணியில் 8- 9 மணி நேரம் பணியாற்றிவிட்டு எஞ்சிய நேரத்தில், கூகுளில் சேர்வதற்கான தகுதியை வளர்த்து கொண்டார். அதற்கு தேவையான படிப்புகளை படித்து வந்தார். அவரது கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பலன் கிடைத்தது. சமீபத்தில் நடந்த நேர்முக தேர்வில் அபிேஷக் குமார் வெற்றி பெற்றார். அவருக்கு ஆண்டு சம்பளமாக ரூ.2.08 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்.,மாதம் பணியில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.தனக்கு கிடைத்த பணி வாய்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், அனைத்தும் சாத்தியமே. எந்த நகரத்திலும், கிராமத்திலும் வசித்தாலும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nellai Ravi
செப் 18, 2024 14:29

தமிழன் இல்லை.


Doubt Danapal
செப் 18, 2024 03:24

அந்த கூகுளுக்கே CEO தமிழன்தான்.


அஸ்வின்
செப் 18, 2024 02:44

தமிழக டாஸ்மார்க் இளைஞர்க கவனிக்கவும்


தாமரை மலர்கிறது
செப் 18, 2024 01:24

கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியம் ஆகும். ஒரு மாணவனுக்கு தெரிந்தது கூட நமது திராவிட நரிகளுக்கு தெரியவில்லை. கோட்டாவில் எதுவும் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். கூகிளில் கோட்டா கிடையாது. படித்தால் தான் சீட் கிடைக்கும்.


Ganapathy
செப் 18, 2024 01:12

பானிபூரி வாயன்னு பீஹாரிகளை கிண்டல் செஞ்ச திருட்டுத்திராவிடிய களவாணிகழக மொக்க பயலுகளா எங்கடா போனீங்க இப்ப.


Kumar Kumzi
செப் 17, 2024 22:57

பானிப்பூரி விற்றவன் இன்று கூகுளில் வேலை பார்க்க போறான் பானிப்பூரி பானிப்பூரின்னு பேசுனவே ஒட்டகம் மேய்க்க போறான் ஹீஹீஹீ இது தான் விதி.


Bala
செப் 17, 2024 23:51

அது திராவிடியன்கன்.


முக்கிய வீடியோ