உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஷ்பாண்டே முதல்வராக மங்கள் வைத்யா ஆதரவு 

தேஷ்பாண்டே முதல்வராக மங்கள் வைத்யா ஆதரவு 

கார்வார் : கர்நாடகாவில் தேஷ்பாண்டே முதல்வர் ஆக, அமைச்சர் மங்கள் வைத்யா, பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.உத்தர கன்னடா ஹலியால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே, 77. முதல்வர் பதவி மீதான தனது ஆசையை நேற்று முன்தினம் வெளிப்படுத்தினார்.இதுகுறித்து மீன்வள அமைச்சர் மங்கள் வைத்யா நேற்று அளித்த பேட்டியில், ''முதல்வர் சித்தராமையாவும், எங்கள் கட்சி மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டேயும் நெருங்கிய நண்பர்கள். நட்பு அடிப்படையில் சித்தராமையா அனுமதித்தால், முதல்வர் ஆவேன் என்று தேஷ்பாண்டே கூறி இருக்கலாம். தற்போது முதல்வர் மாற்றம் குறித்து, எந்த விவாதமும் இல்லை. தேஷ்பாண்டே எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் முதல்வர் ஆனால் மகிழ்ச்சி அடைவேன்,'' என்றார்.உத்தர கன்னடாவின் எல்லாபூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் கூறுகையில், ''எங்கள் மாவட்டத்தின் மூத்த அரசியல் தலைவரான தேஷ்பாண்டே முதல்வர் ஆனால் மகிழ்ச்சி. இதனால், எங்கள் மாவட்டம் வளர்ச்சி அடையும். முதல்வர் பதவி விவகாரத்தில் அவரை பாரபட்சம் பார்க்காமல் ஆதரிப்பேன். எனது அரசியல் வாழ்க்கை எதிர்காலத்தில் கடினமாக இருக்கும் என, எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி கூறி உள்ளார்.''என் அரசியல் வாழ்க்கையை நான் பார்த்து கொள்கிறேன். என்னை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம். கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசும் எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துடியாய் துடிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை