உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மங்களூரு சிறையில் ரெய்டு மொபைல் போன், கஞ்சா பறிமுத ல்

மங்களூரு சிறையில் ரெய்டு மொபைல் போன், கஞ்சா பறிமுத ல்

மங்களூரு: மங்களூரு சிறையில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் கஞ்சா, மொபைல் போன் உட்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தட்சிண கன்னடாவின் மங்களூரு சிறையில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. கைதிகள் கஞ்சா, மொபைல் போன் பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே, சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கே 150க்கும் மேற்பட்ட போலீசார், மங்களூரு சிறைக்கு வந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். கைதிகளை அடைக்கும் அறைகள், கழிப்பறை உட்பட, அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.அப்போது 25 மொபைல் போன்கள், ஒரு ப்ளூ டூத் டிவைஸ், ஐந்து இயர் போன், ஒரு பென் டிரைவ், ஐந்து சார்ஜர்கள், ஒரு கத்திரிக்கோல் உட்பட பல்வேறு பொருட்கள் சிக்கின. அது மட்டுமின்றி, சில கைதிகளிடம் கஞ்சா, 'குட்கா' பாக்கெட்டுகளும் கிடைத்தன. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.கஞ்சா, 'குட்கா' பொருட்கள் கிடைத்ததை கடுமையாக கருதிய மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி