உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மெர்சலான முட்டைக்கோஸ் குழம்பு 

மெர்சலான முட்டைக்கோஸ் குழம்பு 

முட்டைக்கோசை பயன்படுத்தி பொரியல், கூட்டு வைப்பதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் மெர்சல் ஆன ஒரு குழம்பும் வைக்க முடியும் என்றால் நம்ப முடியுமா. நம்பி தான் ஆக வேண்டும். முட்டைக்கோசில் குழம்பு வைப்பது எப்படி என பார்ப்போம்.முதலில் முட்டைக்கோசை சின்ன சின்னதாக நன்கு வெட்டி கொள்ள வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், சீரகம், மல்லி இலை, மஞ்சள் பொடி, கார பொடியை சேர்த்து பிசைந்து, சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும்.உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ள வேண்டும். பின், குழம்பு வைக்கும் பாத்திரத்தை எடுத்து, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் பெருங்காய பவுடர், ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், ஒரு பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக வதக்க வேண்டும்.ஒரு ஸ்பூன் காரப்பொடி, ஒரு ஸ்பூன் மல்லி பவுடர், ஒரு ஸ்பூன் கரம் மசாலா பவுடர் என அனைத்தையும் ஒன்று சேர்த்து மறுபடியும் ஒருமுறை வதக்க வேண்டும். தக்காளியை மிக்சியில் நன்றாக அரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும். தேங்காயை அரைத்து ஊற்ற வேண்டும்.கொதித்த பின் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உருண்டைகளை இதனுடன் சேர்க்க வேண்டும். கடைசியாக மல்லி இலை போட்டு, கீழே இறக்கி வைத்து விட வேண்டும். சூடான சுவையான முட்டைக்கோஸ் குழம்பு தயார். இதற்கு, 'கேபேஜ் காப்டா' என்றும் பெயர் -- நமது நிருபர் - -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை