உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோடையில் வெப்ப அலை வீசும்; வானிலை மையம் எச்சரிக்கை

கோடையில் வெப்ப அலை வீசும்; வானிலை மையம் எச்சரிக்கை

புதுடில்லி : 'நாடு முழுதும், கடந்த பிப்ரவரி மாதம் கடுமையான வெப்பம் பதிவான நிலையில், வரும் மே மாதம் வரை, வழக்கத்தை விட கூடுதல் வெப்பம் பதிவாகி வெப்ப அலை வீசும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nd88lrav&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோடைக் காலம் துவங்கும் முன்னரே, நாட்டின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் கடந்த மாதம், வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருந்ததால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.இந்நிலையில், வரும் கோடைக் காலத்திலும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசலாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுதும், கடந்த மாதம் இயல்பைவிட வெயில் அதிகமாக இருந்தது. இதற்கு முன், 1901 பிப்ரவரியில் இது போன்று வெயில் கொளுத்திய நிலையில், 124 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.அதாவது, பிப்ரவரியில் சராசரியாக, 22.04 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, இயல்பை விட 1.34 டிகிரி அதிகமாகும். குறிப்பாக, கர்நாடக கடலோர பகுதி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது.அதாவது, இந்தப் பகுதிகளில், இயல்பை விட 4 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்த வார துவக்கத்தில் கேரள மாநிலம் கண்ணுாரில், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசாக இருந்தது. மஹாராஷ்டிராவின் மும்பையில் 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் அடித்தது. இந்த ஆண்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இம்மாதம் முதல் வரும் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வடமாநிலங்கள், தென்மேற்கு மாநில பகுதிகளில் அதிக வெப்ப அலை வீசும்.வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, உத்தரகண்ட், பீஹார், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வடக்கு கர்நாடகாவில் மார்ச் முதல் மே மாதம் வரை இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த மாதத்திலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும். இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆகையால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை