உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பால் சங்க தலைவர் ராஜினாமா; அமைச்சரின் நெருக்கடி காரணமா?

பால் சங்க தலைவர் ராஜினாமா; அமைச்சரின் நெருக்கடி காரணமா?

மைசூரு: மைசூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு அமைச்சரின் நெருக்கடி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மைசூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வகிப்பவர் பிரசன்னா. இவர் பிரியாபட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஹாதேவின் மகன்.தலைவராக சிறப்பாக பணியாற்றிய இவர், திடீரென பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது முடிவுக்கு கால்நடைத் துறை அமைச்சர் வெங்கடேஷின் தொந்தரவே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களில், பிரசன்னாவுக்கு, அமைச்சர் 24 நோட்டீஸ் அளித்துள்ளார். அமைச்சர் வெங்கடேஷ், தன் மகனை பால் கூட்டுறவு சங்க தலைவர் பதவியில் அமர்த்த, திரை மறைவில் முயற்சிக்கிறார். எனவே, பிரசன்னாவுக்கு உள் நோக்கத்துடன் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வான ஜி.டி.தேவகவுடா ஆதரவாளர்களில், பிரசன்னாவும் ஒருவர். மைசூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகத்தில், 20 இயக்குனர்கள் உள்ளனர். இதில் 12 பேர் ஜி.டி.தேவகவுடாவின் ஆதரவாளர்கள். எனவே பிரசன்னா போட்டியின்றி, தலைவராக, இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டார்.'இதை சகிக்க முடியாமல், அமைச்சர் வெங்கடேஷ், பிரசன்னாவுக்கு தேவையின்றி, நோட்டீஸ் அளிக்கிறார். இதன் மூலம் பால் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களை மிரட்ட முயற்சிக்கிறார்' என, ம.ஜ.த.,வினர் கூறுகின்றனர்.இதற்கிடையில், பிரசன்னாவின் ராஜினாமாவை அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை