உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; ஒடிசா கடற்கரையில் சோதனை வெற்றி

தேஜஸ் போர் விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல்; ஒடிசா கடற்கரையில் சோதனை வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிபூர்: ஒடிசா கடற்கரையில் தேஜஸ் போர் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்தப் போர் விமானங்களின் மூலம் ஆஸ்ட்ரா ஏவுகணையை செலுத்தி, வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் சோதனை ஒடிசா மாநிலம் சண்டிபூர் கடற்கரையில் நிகழ்த்தப்பட்டது. எதிர்பார்த்தபடியே, ஆஸ்ட்ரா ஏவுகணை வானில் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையானது, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. 100 கி.மீ., தொலைவுக்கு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனை வெற்றி முக்கிய மைல்கல் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கிஜன்
மார் 13, 2025 08:11

உள்ளூர் இலக்குகளை எப்பவுமே கரெக்ட்டாக தாக்கிவிடும் ....


Yes your honor
மார் 13, 2025 08:52

வேண்டுமென்றே குறைசொல்வது ஏன்?


Dharmavaan
மார் 13, 2025 09:07

தேசத்துரோகி


Shankar
மார் 13, 2025 09:22

மதம் மாறிய காபிர். பல்கி பெருகி அவனுக்கு உள்ளே உள்ள இரண்டே ஜாதியில் உள்ள வெறுப்பால் அடித்துக்கொண்டு சாவுவான்.


Anand
மார் 13, 2025 10:49

நல்ல குடும்பத்தில் பிறந்தவன் ஒருபோதும் தாய்நாட்டை பரிகாசம் செய்யமாட்டான்.


Apposthalan samlin
மார் 13, 2025 12:57

இப்பொழுது எப்படி தெரியும் போர் வந்தால் தான் தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை