உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏவுகணை சோதனை வெற்றி

ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசோர்:தரையில் இருந்து செங்குத்தாக வானில் பாய்ந்து செல்லும், குறைந்த துார ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், கடற்படையும் இணைந்து நேற்று நடத்தின.ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரை பகுதியில் நடந்த இந்தச் சோதனை, இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ள இந்த ஏவுகணை, குறைந்த உயரத்தில், அதிக வேகத்தில் வந்த வான் இலக்கை துரத்தி, துல்லியமாக தாக்கி அழித்தது.பல்வேறு சோதனை கருவிகளை பயன்படுத்தி, ஏவுகணையின் செயல்திறனை டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் கணக்கிடுகையில், அனைத்து அளவு கோல்களையும் இந்தஏவுகணை பூர்த்தி செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் வி காமத் உள்ளிட்டோர், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது, இந்திய கடற்படையின் வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் போர் தயார் நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை