உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் மகனுக்கு எம்.எல்.சி., பதவி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தகவல்

முதல்வர் மகனுக்கு எம்.எல்.சி., பதவி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தகவல்

பெங்களூரு, ''முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு, கண்டிப்பாக எம்.எல்.சி., பதவி கிடைத்தே கிடைக்கும். ஆட்சி அமைந்த போதே, மேலிடம் உறுதி அளித்துள்ளது,'' என அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கப்படும், மேலவையின், 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்களின் அடிப்படையில் காங்கிரசுக்கு 7 பதவிகள் கிடைக்கும்.இந்நிலையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து, சமூக வாரியாக மூத்த அமைச்சர்களுடன், மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், பெங்களூரில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.அமைச்சர்கள், சதீஷ் ஜார்கிஹோளி, கிருஷ்ணபைரேகவுடா, பிரியங்க் கார்கே, ஜமீர் அகமது கான் ஆகியோர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினர்.பின், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், ''வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு, கண்டிப்பாக எம்.எல்.சி., பதவி கிடைத்தே கிடைக்கும். ஆட்சி அமைந்த போதே, மேலிடம் உறுதி அளித்துள்ளது,'' என்றார்.வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதற்காக, மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க, வரும் 28, 29ம் தேதி, முதல்வர், துணை முதல்வர் டில்லி செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ