உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர்: இந்திய அணியில் முகமது ஷமி

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர்: இந்திய அணியில் முகமது ஷமி

புதுடில்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.இந்திய வரும் இங்கிலாந்து அணி ஜன.,22 முதல் பிப்., 12 வரை 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. முதலில் டி -20 தொடர் நடக்கிறது.இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். காயம் காரணமாக ஓராண்டு விளையாடாமல் இருந்த முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்அணி விவரம்சூர்யகுமார் யாதவ்(கேப்டன்)சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்)அபிசேக் சர்மாதிலக் வர்மாஹர்திக் பாண்டியாரிங்கு சிங்நிதிஷ்குமார் ரெட்டிஅக்சர் படேல்(துணை கேப்டன்)ஹர்ஷித் ராணாஅர்ஷ்தீப் சிங்முகமது ஷமிவருண் சக்கரவர்த்திரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி