உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போனை எடுத்ததால் மகனை வெட்டிய தாய்

போனை எடுத்ததால் மகனை வெட்டிய தாய்

இந்துார், மத்திய பிரதேச மாநிலம் இந்துார் மாவட்டத்தின் சிம்ரோல் என்ற கிராமத்தில் வசிக்கும் 13 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது, தன் தாயின் மொபைல் போனை எடுத்து அதில் பள்ளியில் இருந்து அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை பார்த்துள்ளார்.இதைப் பார்த்த அவரது தாய் ஆத்திரமடைந்து, அனுமதியின்றி தன் மொபைல் போனை பயன்படுத்திய மகனை சரமாரியாக அடித்து உதைத்தார்.அப்போதும் அவரது கோபம் தணியவில்லை. அருகில் இருந்த அரிவாளை எடுத்து மகனை வெட்டினார். இதில் சிறுவனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனின் தாயார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை