உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது

ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது

மூணாறு:ஆந்திர மாநிலம் கடப்பாவில் டியூஷனுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் மாயமானவரை மூணாறில் போலீசார் கைது செய்தனர். கடப்பாவைச் சேர்ந்தவர் ஜபருல்லா 30. இவரிடம் டியூஷன் படிக்கச் சென்ற 14 வயது சிறுமியுடன் ஆக.,20ல் மாயமானார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். கடப்பா போலீசார் ஜபருல்லாவின் அலை பேசி எண்ணை வைத்து ' சைபர் கிரைம்' போலீசாரின் உதவியுடன் விசாரித்தனர். அவர், கேரள மாநிலம் மூணாறில் இருப்பதாக தெரியவந்தது. மூணாறு மகாத்மாகாந்தி சிலை அருகில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியுடன் தங்கி இருந்த ஜபருல்லாவை ஆந்திரா கடப்பா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ