தேசியம் பேட்டி
மிகப்பெரும் ஊழல்!சுதந்திர இந்தியாவின் மிகப்பெரும் ஊழல் என்றால், அது தேர்தல் பத்திரங்கள் திட்டம் தான். கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, இந்த திட்டம், பண மோசடிக்கு வழிவகுத்து விட்டது. இதன் வாயிலாக கருப்பு பணம் வெள்ளையாக மாறியது.சீதாராம் யெச்சூரிபொதுச்செயலர்,மார்க்சிஸ்ட் கம்யூ.,தீர்வு தராது!ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், துல்லியம் இல்லாத போலி தரவுகள் உருவாக வாய்ப்பு உண்டு. வேலைவாய்ப்பின்மை, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு தீர்வு தராது. இது குறித்து, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனந்த் சர்மாமுன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்அனைத்திலும் வெற்றி!மோடி அலை வீசுவதால், மத்திய பிரதேசத்தின் 29 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். நாங்கள் வேட்பாளரை அறிவித்து விட்டோம். காங்கிரஸ் வேட்பாளரை தேடிக்கொண்டு இருக்கிறது. காங்.,குக்கு ஒரு எம்.பி., சீட்டு கூட கிடைக்காது. மோகன் யாதவ்மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,