உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளிதழ் வினியோகஸ்தர் மாநாடு சித்ரதுர்காவில் நாளை நடக்கிறது

நாளிதழ் வினியோகஸ்தர் மாநாடு சித்ரதுர்காவில் நாளை நடக்கிறது

சித்ரதுர்கா: கர்நாடக மாநில நாளிதழ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின், மாநில அளவிலான நான்காவது மாநாடு, சித்ரதுர்காவில் நாளை நடக்கிறது.கர்நாடக மாநில நாளிதழ் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் மாநாடு நடத்தி, தங்கள் நலன் குறித்து விவாதித்தனர்.இந்த வகையில், நான்காவது மாநில மாநாடு, சித்ரதுர்காவின் முருகா மடத்தில் உள்ள அனுபவ மண்டபத்தில் நாளை நடத்தப்படுகிறது. சித்ரதுர்கா மாவட்ட நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து நடத்துகிறது.மாநாட்டை காலை 11:30 மணிக்கு, முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். கூட்டமைப்பு தலைவர் சம்புலிங்கா தலைமை வகிக்கிறார். மாவட்ட நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் திப்பேஸ்வாமி வரவேற்கிறார்.மதியம் 2:00 மணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாளிதழ் வினியோகஸ்தர்கள் பிள்ளைகளுக்கு, 'பிரதிபா புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.மதியம் 3:00 மணிக்கு, 'வினியோகஸ்தர் இன்றும், என்றும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. முதல்வரின் ஊடக செயலர் பிரபாகர், கர்நாடக பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் சிவானந்த தகடூர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !