உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வலியுறுத்தல்

அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய நிதிஷ் கட்சி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவத்திற்கு ஆட்கள் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி கூறியதாவது: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால் வாக்காளர்களின் ஒரு பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மக்கள் எழுப்பும் சந்தேகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hyjcv9ep&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இது தேர்தலில் எதிரொலித்தது. இதில் நாங்கள் முரண்படவில்லை. அக்னிபாத் திட்டம் அமல்படுத்தப்பட்ட போது, ஆயுதப்படையினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்.பொது சிவில் சட்டம் குறித்து சட்ட கமிஷன் தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். இந்த திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்பட வேண்டும். இது குறித்த எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Krishna R
ஜூன் 09, 2024 05:32

போடா பி உண்டி சாங்கி ஓரமா பொய் கதறி


karthikeyan
ஜூன் 07, 2024 14:33

நாட்டின் பாதுகாப்பில் நிதிஷ் குமார் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது ......


Lion Drsekar
ஜூன் 07, 2024 12:26

இதுதான் ஆரம்பம் . அவரவர்கள் நினைத்ததை நடத்தியே முடக்கும் , முடிக்கும் சம்பவங்கள் தொடக்கம் . இனி யார் மீதும் எந்த ஒரு குற்ற நடவடிக்கையும் எடுக்கவும் முடியாது . அடுத்த ஆப்பு ஜி எஸ் டி கும் வரும், அவர்கள் மக்களின் சார்பாக உடன் இருந்தாலும் , மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த , அதையும் நிறைவேற்ற வேண்டிய தருணமும் வரும் . நல்லது நடந்தால் நல்லது . வந்தே மாதரம்


Kanns
ஜூன் 07, 2024 08:57

Not Only Army BUT Implement Contract Jobs to All only Minm Wages from Labourer to President-2times Jobs to UnEmployeds. Provide Compulsory ReEmployment to all Army Contract Staff. BAN ReEmployment to All Pensioners


சோலை பார்த்தி
ஜூன் 06, 2024 22:18

அக்னிபாத். .இளைய சமுதாயம் தறி கெட்டு போக கூடாது என்பதற்காக உருவாக்க பட்டது. . . .போதை..போக்கிரி இந்தியா வேண்டாம். . நிலையான நிம்மதியான இந்திய குடும்பமாக இருக்க வேண்டும் . . .ஜெய்ஹிந்த்


pmsamy
ஜூன் 07, 2024 07:27

Agneepath இல்லாம தானே நீ வந்த நீ தறி கெட்டு போயிட்டியா ?


சோலை பார்த்தி
ஜூன் 06, 2024 22:15

இந்தியா முன்னேற கூடாது னு கஙகனம் கட்டி. . .அலை கிற கூட்டனிக்கு போய்ட வேண்டியது தான. . . .ஒரு மாநில முதல்வராக இருக்கும் நீங்க . . இப்படி தரம் கெட்டு பேசுறீங்க


venugopal s
ஜூன் 06, 2024 21:26

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க! இனிமேல் தான் இருக்கு. இது வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல் தான் என்று மோடி அவர்கள் தேர்தல் பரப்புரையில் சொன்னாரே, இது தானா அது?


subramanian
ஜூன் 06, 2024 20:45

நல்ல திட்டம் அக்னிபத் . நிதிஷ் தேவை இல்லாமல் பிரச்சனை செய்கிறார்.


Mohan
ஜூன் 06, 2024 20:41

வேலை கிடைக்காமல் லடசக்கணக்கான இளைஞர்கள் தவிக்கின்றனர். இவர்களை அமைதி மார்க்கத்தினரும், போதை கும்பலும் தவறு செய்ய பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க ஒரு திட்டத்துடன், போலீஸூக்கு ஹோம்கார்ட்ஸ் போல ராணுவத்திற்கு அக்னிபத் என்பது போல இளைஞர்களை தயார் படுத்த முயற்சி செய்துள்ளது மோடி அரசு. குறிப்பிட்ட காலத்தில் திறமையாக செயல்படுபவர்களை ராணுவத்தில் இணைப்பது தான் குறிக்கோள். அகனிபத் வீரர்களை ராணுவ வீரனாக பணியமர்த்த எதிரிக்கட்சிகள் கோருவது வஷமத்தனம். அப்படி ராணுவத்தில் சேர்வதானால் நேரடியாக ராணுவத்திற்கு முயற்சி செய்ய சொல்லலாமே. இளைஞர்களிடம் சில பல குறைகள் இருந்தாலும் அக்னிபத்தில் செர்க்கின்றனர். இளைஞர்கள் கெட்டு குட்டிச்சுவராக கூடாது என்று திட்டம் ஆரம்பித்தால் இராணுவத்தை நாசமாக்கும் விதமாக திரித்து பேசும் கபட ஆசாமிகளை திருத்த முடியாது


Iniyan
ஜூன் 06, 2024 20:31

நிதிஷ் மற்றும் சந்திர பாபு இருவரும் நம்பிக்கை துரோக, சுயநல , ஊழல் வாதிகள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை