| ADDED : மே 10, 2024 05:24 AM
பெங்களூரு : கர்நாடகாவில் ஆறு எம்.எல்.சி., தொகுதி தேர்தலுக்கான, வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.கர்நாடக சட்ட மேலவைக்கு, கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் இருந்து, காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக தேர்ந்து எடுக்கப்பட்ட சந்திரசேகர் பாட்டீல், பெங்களூரு பட்டதாரி தொகுதி பாஜ., - எம்.எல்.சி., ஏ.தேவகவுடா, கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., நாராயணசாமி, கர்நாடக தென்மேற்கு ஆசிரியர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா ஆகியோரின், ஆறு ஆண்டு பதவிக்காலம் ஜூன் 21 ம் தேதியுடன் முடிகிறது.இதுபோல காலியாக இருக்கும் தென்மேற்கு பட்டதாரி, தெற்கு ஆசிரியர் தொகுதிக்கும் தேர்தல் நடக்க வேண்டும். இந்த ஆறு தொகுதிகளுக்கும், ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜூன் 6ம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு நேற்று துவங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வரும் 16ம் தேதி. மனுக்களை வாபஸ் பெற 20 ம் தேதி கடைசி நாள். முதல் நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.