உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

என்.எஸ்.ஜி. இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமனம்

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக மூத்த ஐ..பி.எஸ். அதிகாரி பி.ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, 1984ல், உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய இயக்குனர் நளின் பிரபாத், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு டி.ஜி..,பி.யாக பொறுப்பேற்க உள்ளார்.இததையடுத்து என்.எஸ்.ஜி., புதிய இயக்குனராக பி. ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1992ம் ஆண்டு பீஹார் ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சரவை நியமன கமிட்டி அறிவித்துள்ளது. பி.ஸ்ரீனிவாசன், வரும் 31-ம் தேதி பதவியேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ