உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுப்பாடு இழந்த கார் மோதியதில் ஒருவர் பலி

கட்டுப்பாடு இழந்த கார் மோதியதில் ஒருவர் பலி

பாலக்காடு; பாலக்காடு அருகே, கட்டுப்பாடு இழந்த கார், சாலையோர டீக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் இறந்தார்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் தென்னிலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 58. வீட்டின் அருகே உள்ள சாலையோரத்தில் டீக்கடை நடத்தி வந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 7:15 மணிக்கு டீக்கடைக்கு முன் கண்ணன் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் கட்டுப்பாடு இழந்து டீக்கடையில் மோதியது.இந்த விபத்தில், கண்ணன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தார். தகவல் அறிந்து வந்த ஆலத்தூர் போலீசார், கண்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை