உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மந்தமான தேர்தல் கமிஷன் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

மந்தமான தேர்தல் கமிஷன் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்

லோக்சபா தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் பதிவான ஓட்டுக்களின் இறுதி எண்ணிக்கையை வெளியிடாமல் தாமதித்த தேர்தல் கமிஷனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. 21 மாநிலங்களில் உள்ள, 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்., 19ல் நடந்தது. 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்., 26ல் முடிந்தது.இந்த இரண்டு ஓட்டுப்பதிவுகளும் முடிந்த அன்று மாலை 7:00 மணிக்கு, பதிவான ஓட்டுகளின் சராசரி விகிதத்தை மட்டுமே தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பின், பதிவான ஓட்டுக்களின் இறுதி எண்ணிக்கையை வெளியிடவில்லை.இது எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இரண்டு கட்ட ஓட்டுப்பதிவில் பதிவான இறுதி ஓட்டு சதவீதத்தை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன் விபரம்:முதல்கட்ட தேர்தலில், ஆண்கள் 66.22 சதவீதமும், பெண்கள் 66.07 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 31.32 சதவீதமும் ஓட்டளித்துள்ளனர். இதில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர்.இரண்டாம் கட்ட தேர்தலில், ஆண்கள் 66.99 சதவீதமும், பெண்கள் 66.42 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 23.86 சதவீதமும் ஓட்டளித்துள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனாலும், எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்ற எண்ணிக்கை அடிப்படையிலான புள்ளி விபரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ