உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 18ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட்?

ஜூன் 18ம் தேதி கூடுகிறது பார்லிமென்ட்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் ஜூன் 18ம் தேதி பார்லிமென்ட் முதல் கூட்டம் கூட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களில் 33 பேர் மத்திய அமைச்சரவைக்கு புதுமுகங்கள். இந்நிலையில், வரும் ஜூன் 18ம் தேதி பார்லிமென்ட் முதல் கூட்டம் கூட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். ஜூன் 20ம் தேதி சபாநாயகர் தேர்வு செய்யப்படுவர். ஜூன் 21ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. முதல் பார்லிமென்ட் கூட்டம் எப்போது கூடுகிறது என்பது குறித்து, இன்று மாலையில் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கனோஜ் ஆங்ரே
ஜூன் 10, 2024 17:16

கட்சிலந்து ஒருத்தர் கூட ஜெயிக்க முடியாத வயிற்றெரிச்சலில்... என்னென்ன சொல்றானுங்க பாருங்க...? ரிசல்ட் வந்து ஒரு வாரமாச்சே, இன்னுமா எரியுது.... நாங்க முப்பது, இருபது அப்படியே அள்ளுவோம்... ஒரு திராவிடன்கூட ஜெயிக்கமாட்டார்ன்னு சொன்னீங்க...


Rpalnivelu
ஜூன் 10, 2024 15:40

கேன்டீனில் பால் கிடைக்குமா?


Siva Subramaniam
ஜூன் 10, 2024 13:37

மீண்டும் அம்மாவும் பிள்ளையும் பார்லிமென்டை நிறுத்த பாடுபடுவார்கள்.


Vijayakumar Srinivasan
ஜூன் 11, 2024 01:24

அதுதான் உண்மை.ஏதோஒரு.வெற்றுகாரணத்தைகாட்டி.வெளிநடப்புசெய்துஎல்லோரும்காந்திசிலைக்குசெல்வார்கள்.பின்உணவகம்சென்றுநலம்விசாரித்துபிரிவார்கள்.


sethu
ஜூன் 10, 2024 12:54

அலிபாபாவும் 40 திருடர்களும் வருவார்கள் அங்குள்ள பொருள்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள் போலீஸ்கார் .இம்முறை டெல்கி தெருவில் கூட இறங்கி பிக்பாகெட் அடிக்கலாம் கவனமாக டெல்லி மக்கள் இருக்கணும்


Anand
ஜூன் 10, 2024 11:51

நாற்பதும் கேன்டீனை காலி செய்து நாறடித்துவிடும்.


மேலும் செய்திகள்