உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -ஒளிப்பதிவாளர் தற்கொலை

-ஒளிப்பதிவாளர் தற்கொலை

புதுடில்லி:உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரை சேர்ந்தவர் ராஜ் பிரசாத்,22. புதுடில்லி சத்தர்பூர் சுமன் சவுக்கில் வசித்தார். சினிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தெற்கு டில்லி மைதான்கரியில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்தார். தகவல் அறிந்து போலீசார் வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உத்தரகண்ட்டிலுள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மைதான்கரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை