உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிக்ஸ் உச்சி மாநாடு; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சி மாநாடு; ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் புடின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். அக்டோபர் 24ம் தேதி இந்தியா திரும்புகிறார்.ரஷ்யாவில் உள்ள கசானில் அக்டோபர் 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்ற பிரதமர் மோடி அக்டோபர் 23ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.பிரிக்ஸ் மாநாட்டில் உலகளாவிய சமூகத்தை பாதிக்கும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமான சர்வதேச பிரச்னைகளில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நீண்ட காலமாக நடந்து வரும் உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிபர் புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என தெரிகிறது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15வது உச்சி மாநாடு தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சம்பா
அக் 19, 2024 04:33

இங்க இருந்தால் தான் ஆச்சர்யம்


vadivelu
அக் 19, 2024 07:15

ஆமாம், குடும்பத்துடன் செல்கிறார். இழுக்க போகிறார்.


RAJ
அக் 18, 2024 20:09

கலக்குங்க மோடிஜி...


Duruvesan
அக் 18, 2024 16:06

இதுக்கு முன்னாடி ரஷ்யா உக்ரேன் போயி போர் நிறுத்திட்டார்னு இங்க நெறய பேர் பீலா உட்டாங்க


புட்டிலென்ஸ்க்கி
அக் 19, 2024 02:54

அது டிரெயிலர் பாஸு. அப்புறம் ரயிலி போனது டிரெய்லர் 2. இப்போ டிரெயிலர் 3. அவிங்களே போரடிச்சு போரை நிறுத்திருவாங்க. மெயின் பிக்சர் இல்லாமலே போரை நாந்தான் நிறுத்தச் சொன்னேம்பாரு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை