உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி வெற்றி: உலக தலைவர்கள் சொல்வது என்ன?

பிரதமர் மோடி வெற்றி: உலக தலைவர்கள் சொல்வது என்ன?

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்ற நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

லோக்சபா தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிணைந்து செயல்பட நான் எதிர்நோக்குகிறேன். இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி: சிறப்பாக செயல்பட பிரதமர் மோடிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். இரு நாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே: மோடி மீதான இந்திய மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது.

அமெரிக்கா பாராட்டு

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்: ஜனநாயக திருநாட்டில் பெரும் தேர்தல் பணிகளை சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவிற்கு பாராட்டுக்கள் ! அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு நெருக்கமான கூட்டாண்மை தொடரும். பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.

உறவு வாழ்க

மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்: மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றத்தை அடையும். ‛மொரீஷியஸ் -இந்தியா உறவு வாழ்க'.

நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால்

தொடர்ந்து மூன்றாவது முறையாக லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்.

பூடான் பிரதமர் ஷெ ரிங் டோப்கே

உலகின் மிகப்பெரிய தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த, அவருடன் பயணியாற்ற ஆவலோடு உள்ளேன்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

3வது முறையாக பிரதமராக உள்ள மோடிக்கு வாழ்த்துகள். இரு தரப்பு உறவுகள் மேலும் வலுவடையும்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறை வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அமைதி மற்றும் செழிப்பை விரும்புகிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுவடையும் என நம்புகிறேன்.

நன்றி

வாழ்த்து தெரிவித்த, அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ram
ஜூன் 05, 2024 12:19

30 கட்சிகள், மிஸ்ஸியனிரிஸ், ஜிகாடிஸ், வெளிநாட்டு சக்திகள், காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகள் சொன்ன பொய்கள், மாதம் 8500, SC ST சலுகைகள் ரத்து etc etc சொல்லி 230 இதில் இவர்கள் வெட்கமே இல்லாமல் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிங்கம் பிஜேபி தனி கட்சியாக 242, my hearty congratulation to பிஜேபி. பார்லிமென்ட் கேன்டீனில் பஜ்ஜி டீ ரெடி இங்கிருந்து செல்லும் 40 ஆட்களுக்கு.


PRAKASH
ஜூன் 05, 2024 12:14

இந்த தேர்தலில் முற்றிலும் தோற்றவர்கள் இ. ந். டி. கூட்டணிக்கு வோட்டளித்த மக்களே.


Ramesh Sargam
ஜூன் 05, 2024 11:56

மாதம் எட்டாயிரம் என்ற வெற்று தேர்தல் அறிக்கைக்கு ஏமாந்தார்கள்.


SIVAN
ஜூன் 05, 2024 11:38

எப்போ வாக்காளர்கள் பணம் பெற்று வாக்களிக்கிறார்களோ, இனி யாருக்கும் ஒரு துளி உதவி கூட செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அவர்கள கை நீட்டி சத்தியம் செய்து காசு வாங்கி கொண்ட கட்சியிடம் உதவி பெற்று கொள்ளட்டும். கூடியவிரைவில் பிஜேபி தனி பெரும்பான்மை கட்சி ஆட்சி என்ற அறிவிப்பு வரும், வரவேண்டும்.


A1Suresh
ஜூன் 05, 2024 11:00

நாட்டை திவாலாக்குவது இலவசம் தான். பணத்தை சம்பாதிக்கிற, நிலையான, ஊழலற்ற, நேர்மையான பாஜக தான் நல்வாழ்விற்கான ஆட்சி தரும் என்று பாமரர்களுக்கு புரிவதில்லை. மாதம் எட்டாயிரம் டகா டக் டகா டக் டகா டக் என்ற வெற்று தேர்தல் அறிக்கைக்கு ஏமாந்தார்கள்


வாக்காளன்
ஜூன் 05, 2024 12:48

பாமரர்களுக்கு புரியவில்லை என்பது உண்மை, அதை சரி செய்ய விபரம் அறிந்த படித்தவர்கள் ஏன் வாக்களிக்க வரவில்லை? நாடு முழுவதும் 90 சதவீதம் வாக்கு பதிவு நடந்திருந்தால் மோடிஜி யின் 400 கணவு நிஜமாயிருக்கும். இன்டி கூட்டணி அமைதி ஆக இருந்திருக்கும். தநாவில் 40 அண்ணாமலையாரே வெற்றி பெற்று இருப்பார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை