உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அண்ணியை அடித்துக் கொன்ற வாலிபர்களுக்கு போலீஸ் வலை

அண்ணியை அடித்துக் கொன்ற வாலிபர்களுக்கு போலீஸ் வலை

பலியா:குடும்பத் தகராறில் அண்ணியை கல்லால் அடித்துக் கொண்ற வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டம் ராஜ்புத் நெவ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா குப்தா, 45. இவருக்கும், அவருடைய மைத்துனர்களான விஜய் குப்தா மற்றும் கிருஷ்ண குமார் குப்தா ஆகியோரிக்கும் குடும்ப ரீதியான தகராறு இருந்தது.நேற்று அதிகாலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. விஜய் மற்றும் கிருஷ்ண குமார் ஆகிய இருவரும் சேர்ந்து, சந்தியா தலையில் கல்லால் தாக்கினர். பலத்த காயம் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.அவரது குடும்பத்தினரின் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜய் மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோரைத் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி