உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இரண்டாம் உலகப் போரின் 80 ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் மே 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாபெரும் ராணுவ பேரணி நடைபெற இருக்கிறது. இந்தப் பேரணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், ராணுவ வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xomaa57h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிவப்பு சதுக்கத்தில் நடக்கும் பேரணியில் இந்திய ராணுவமும் கலந்து கொள்ள இருப்பதாக ரஷ்ய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணிக்காக பயிற்சி மேற்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே இந்திய ராணுவம் ரஷ்யா செல்ல இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Oviya Vijay
பிப் 26, 2025 23:05

ஈலோகத்தில் ஒரு மனுஷன் ஜாலியா உண்டெனில் அது நம்ம ஜீ தான் பா... பாக்கவே சோக்கா இருக்கிது பா... என்னமா ஊரு சுத்துறாரு பாரு இந்த மனுஷன்... என்ஜோய்...


guna
பிப் 26, 2025 23:26

இது போடுற கருத்து ஐய்ந்த் அறிவு மட்டுமே


J.Isaac
பிப் 26, 2025 22:39

அப்படியே மணிப்பூரும் சென்று வரலாமே


சுகன்லால் சிங்
பிப் 26, 2025 18:47

பழசைக் கிண்டி கொண்டாடறாங்கோ. என்றைய அச்சு நாடுகள் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் எல்லாம் இன்னிக்கி இவிங்களோட சேந்தாச்சு. பிரிட்டன் ரிடையராயாச்சு. ஃப்ரான்ஸ் சுருங்கியாச்சு. ரஷ்யா கம்யூனிஸ்ட்டா இன்னும் இருக்கு. இந்தியாவுக்கும் ரெண்டாம் உலகப் போருக்கும் என்ப தொடர்பு? அங்கே இது போருக்கான நேரம் இல்லைன்னு பேசி நோபல் பரிசு வாங்கிற வேண்டியதுதான்.


Bye Pass
பிப் 26, 2025 20:58

நீங்க பேனாவை நட்டுவெச்சு மெரீனாவை நாறடியுங்க..பேனா முனையில் காக்கா உக்காரமுடியாது ..பதம் பாத்துரும்


SUBBU,MADURAI
பிப் 26, 2025 17:50

Expect massive rise in false narratives from Congress and Left ecosystem over the coming days. None of our internal enemies will like that Indian PM gets to have global visibility at such an event.


முக்கிய வீடியோ