உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெறிநாய் கடி தொற்றை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வெறிநாய் கடி தொற்றை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம: வெறிநாய் கடி தொற்றைத் தடுப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி குழந்தைகளுக்கு கேரள அரசு வெளியிட்டுள்ளது.கேரளாவில் பல இடங்களில் பள்ளி வளாகங்களில் தெருநாய்கள் தங்கி இனப்பெருக்கம் செய்வதுடன், குழந்தைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பள்ளி குழந்தைகளிடையே வெறிநாய்க் கடி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தெருநாய்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி இனப்பெருக்கம் செய்வதை தடுக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறிநாய்க் கடி மற்றும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பள்ளி குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாய் உள்ளிட்ட விலங்குகள் தாக்கினால், அது குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும். மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து வெறிநாய் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தை பள்ளிகளில் வரும் 13ம் தேதி நடத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கூட்டம் நடத்தப்படுவதை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி