வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Ramesh Sargam
மார் 12, 2025 12:08
ஓரிரு இடங்களில் பலத்த மழை. ஓரிரு இடங்களில் ஓரளவுக்கு மழை. ஆனால் வெப்பம் தணிந்தது.
பெங்களூரு; பெங்களூரில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக கொளுத்தியது. இதனால், மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், நேற்றும், இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.அதேபோல், ரிச்மெண்ட் சாலை, மெஜஸ்டிக், மாரத்தஹள்ளி, கோரமங்களா, மல்லேஸ்வரம், சாந்திநகர் ஆகிய இடங்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.மழை பெய்ததால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியோர் என பலரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.பலத்த மழை காரணமாக, வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியாக காணப்பட்டது.
ஓரிரு இடங்களில் பலத்த மழை. ஓரிரு இடங்களில் ஓரளவுக்கு மழை. ஆனால் வெப்பம் தணிந்தது.