உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கவயலில் மழைநீர் பாதிப்பு

தங்கவயலில் மழைநீர் பாதிப்பு

தங்கவயல் : தங்கவயலில் நேற்று அதிகாலை 3:30 மணி முதல் 8:45 மணி வரை பயங்கர இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தங்கவயலில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 3:30 மணிக்கு துவங்கிய மழையால் தாழ்வான பகுதியில் ஆறுபோல் வெள்ளம் புரண்டோடியது.சாலையில் இருந்து வெள்ளம் வெளியேறாமல் வீடுகளில் புகுந்தது. அந்த மழைநீரை வெளியேற்ற பலர் அவதிப்பட்டனர்.சீரான மழைநீர்கால்வாய் இல்லாததால்தான் மழை வெள்ளம் தத்தளிக்க வைக்கிறது. பாதிப்பு ஏற்படும்போது வந்து வீடியோ படம் எடுப்பதோடு அதிகாரிகளின் கடமை முடிந்ததாக கருதுகிறார்கள்.மழைநீர் பாதிப்பை தடுக்க மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்துவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே வரிசை வரிசையாக ஓட்டுக்காக வருகிறார்களே தவிர, மக்கள் பிரச்னைகள் மீது அக்கறை காட்டுவதில்லை என்று அங்கலாய்கின்றனர்.கோலார் மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகள்தங்கவயலுக்குவந்திருந்தும் பாதிப்பு பகுதிகளை வந்து பார்வையிடவில்லை.கோலார் மாவட்ட கலெக்டர் அலட்சியம் காட்டுகிறாரோ என்றுஅப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர்.மழை பாதிப்புபகுதிகளை சீர்படுத்த நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.8.5.2024 / ஜெயசீலன்9_DMR_0011தெருவில் ஆறாக பாய்ந்துவீடுகளில்தேங்கும் மழைநீர். இயல்பு நிலையை பாதித்த உரிமம் பேட்டை பிஷ்லைன் பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ