உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எல்.சி., நகைகளை திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

எம்.எல்.சி., நகைகளை திருடிய ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

ஹலசூரு கேட்: ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷரவணாவுக்கு சொந்தமான நகைகளை திருடிய வழக்கில், ராஜஸ்தான் வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷரவணா. தொழில் அதிபரான இவர் ஸ்ரீ சாய் கோல்டு என்ற பெயரில், நகைக்கடைகள் நடத்தி வருகிறார். நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்க, பெங்களூரு ஹலசூரு கேட்டில் உள்ள ஹால்மார்க் சென்டருக்கு, ஷரவணாவின் நகைக்கடையில் இருந்து 1 கிலோ தங்க நகைகள், கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டு இருந்தன. ஆனால், அந்த நகைகள் திருடப்பட்டன.இதுகுறித்து ஹால்மார்க் சென்டரின் உரிமையாளர், தன்னிடம் வேலை செய்த ராஜஸ்தானின் மவுனேஷ், 26, என்பவர் மீது புகார் அளித்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி ராஜஸ்தானில் மவுனேஷ், 26, அவரது நண்பர் மகாவீர், 26, ஆகியோரை ஹலசூரு கேட் போலீசார் கைது செய்தனர்.ஹால்மார்க் பதிக்க வந்த நகைகளை எடுத்து கொண்டு, ராஜஸ்தான் தப்பிய மவுனேஷ், அந்த நகைகளை விற்காமல், நண்பர் மகாவீர் வீட்டில் வைத்து உள்ளார். அந்த நகைகளை அபகரிக்க திட்டமிட்ட மகாவீர், பெங்களூரு போலீசார் இங்கு வந்து எடுத்து சென்றனர் என்று, கதை கட்டி உள்ளார். மவுனேஷும் நம்பினார்.போலீசார் முதலில் மவுனேஷை கைது செய்து நகை பற்றி விசாரித்த போது, மகாவீர் தன்னை ஏமாற்றியது தெரிந்தது. இதனால் நண்பரையும் போலீசிடம் மாட்டி விட்டார். நகைகளை விற்று அதில் 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை, மகாவீர் வாங்கி உள்ளார். அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை தற்போது போலீசார் மீட்டு உள்ளனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி