உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபையில் சம்பந்திகள் மோதல்

சட்டசபையில் சம்பந்திகள் மோதல்

பெங்களூரு : எலஹங்கா நகராட்சிக்கு நிதி ஒதுக்காதது தொடர்பாக, சம்பந்திகளான அமைச்சர் பைரதி சுரேஷ் - பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் இடையே, சட்டசபையில் வார்த்தை மோதல் ஏற்பட்டது.சட்டசபையில் எலஹங்கா பா.ஜ., உறுப்பினர் விஸ்வநாத் பேசுகையில், ''எலஹங்கா கிராம பஞ்சாயத்தாக இருந்தது. நகராட்சியானால் நிறைய நிதி கிடைக்கும் என்ற ஆசையில், நகராட்சியாக்க பாடுபட்டேன். இரண்டு ஆண்டுக்கு முன்பு நகராட்சி ஆனது. ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட அரசு நிதி ஒதுக்கவில்லை. கிராம பஞ்சாயத்தாக இருந்திருந்தால் கூட, நிதி கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்,'' என்றார்.இதற்கு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் பதில் அளிக்கையில், ''நகராட்சி நிர்வாகம் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை வைத்து, வளர்ச்சி அடைய வேண்டும். எல்லாவற்றிக்கும் அரசிடம் இருந்து நிதியை எதிர்பார்ப்பது சரி இல்லை,'' என்றார். இந்த பதிலால் விஸ்வநாத் அதிருப்தி அடைந்தார்.பைரதி சுரேஷ் மகன் சஞ்சய், விஸ்வநாத் மகள் அபூர்வாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததும், இருவரும் சம்பந்திகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை