உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆர்.ஆர்.நகரில் கலவரம் நடக்கும் அபாயம்: முனிரத்னா

ஆர்.ஆர்.நகரில் கலவரம் நடக்கும் அபாயம்: முனிரத்னா

பெங்களூரு: ''ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதியில், துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியை போன்று கலவரம் நடக்கும் அபாயம் உள்ளது,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா தெரிவித்தார்.இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று கூறியதாவது:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் போது, ஆர்.ஆர்.நகரின் பாதுகாப்புக்கு, துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும். துணை ராணுத்தினர் வராவிட்டால், எத்தனை பிணங்கள் விழுமோ தெரியாது. தொகுதியில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே காரணமாக இருக்கும்.பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்களை விலைக்கு வாங்க, காங்கிரஸ் முற்பட்டுள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில், ஒவ்வொரு தலைவரையும், 20 முதல் 25 கோடி ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர். பணம் கொடுக்கிறோம், மகனுக்கு வேலை கொடுக்கிறோம், வீடு கட்டி கொடுக்கிறோம் என, ஆசை வார்த்தை காண்பிக்கின்றனர்.சேலைகள், குக்கர்களை எங்கள் தொகுதியில் கொண்டு வந்து வைத்துள்ளனர். காங்கிரசார் கூறியபடி தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது. போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுங்கள் என, கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இடமாற்றம் செய்யவில்லை.குக்கர், சேலைகளை எங்கு வைத்துள்ளனர் என்ற தகவல் கொடுத்துள்ளோம். இது குறித்து குமாரசாமியும் கூட, புகார் அளித்தும் பயனில்லை. ஆர்.ஆர்.நகரில் எவ்வளவு பணிகளை, சுரேஷ் செய்துள்ளார் என்ற தகவலை தெரிவிக்கிறோம். பஸ் நிழற் குடைகளில் அவரது போட்டோவை தவிர, வேறு என்ன உள்ளது என்பதை ஆவணங்களுடன் பேசுவோம்.ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதியில், துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியை போன்று கலவரம் நடக்கும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி