உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி

நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி

 எத்தினஹொளே திட்டத்தில், துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகாவின் 45 ஏரிகள், கொரட்டகரே தாலுகாவின் 62 ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக 553 கோடி ரூபாய் செலவிடப்படும் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ள திட்டங்கள், நடப்பாண்டு முடிக்கப்படும்1. விருஷபாவதி வேலி முதலாவது கட்ட பணிகள் நடத்தி, 79 ஏரிகள் நிரப்பப்படும். இத்திட்டத்துக்கு 1,080 கோடி ரூபாய் செலவிடப்படும்2. ஹெச்.என்.வேலி இரண்டாவது கட்டத்தில், 70 கோடி ரூபாய் செலவில் 24 ஏரிகள் நிரப்பப்படும்.3. பெங்களூரு கிழக்கு தாலுகாவின் 18 ஏரிகள் 93.50 கோடி ரூபாய் செலவில் நிரப்பப்படும் நடப்பாண்டு மாநிலம் முழுதும், சிறிய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், ஏரிகள் சீரமைப்பு, அணைகளை பலப்படுத்துவது, ஏற்ற நீர்ப்பாசனம், தடுப்பணை கட்டுவது உட்பட, மற்ற பணிகளுக்காக 2,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ