உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.4 லட்சம் லஞ்சம்: அரசு அதிகாரி கைது

ரூ.4 லட்சம் லஞ்சம்: அரசு அதிகாரி கைது

சித்ரதுர்கா : ஒப்பந்ததாரரிடம் 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, அரசு அதிகாரி லோக் ஆயுக்தாவிடம் கையும், களவுமாக சிக்கினார்.சித்ரதுர்காவில், திறந்தவெளி பகுதிகள் வளர்ச்சி ஆணையம் சார்பில் சில பணிகளை, ஒப்பந்ததாரர் ஒருவர் எடுத்து செய்தார். பணிகளை முடித்த அவர், பில் தொகை வழங்கும்படி கோரிக்கை விடுத்தார். பல நாட்களாக அலைந்தும் பில் தொகை கிடைக்கவில்லை.இது குறித்து, திறந்தவெளி பகுதி வளர்ச்சி ஆணைய செயலர் பசவ ராஜப்பாவிடம் கேட்ட போது, தனக்கு 4 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பில் தொகையை தருவதாக கூறினார்.லஞ்சம் கேட்டது குறித்து, லோக் ஆயுக்தாவிடம் ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். லஞ்ச அதிகாரியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் என்ன செய்ய வேண்டும் என, கூறினர்.அவரும் நேற்று மதியம், அதிகாரி பசவ ராஜப்பா அலுவலகத்துக்கு சென்று, பணத்தை கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., பசவராஜ் தலைமையிலான அதிகாரிகள், பசவ ராஜப்பாவை கையும், களவுமாக கைது செய்தனர். அவர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை