பெண்களுக்கு ரூ.94,000 கோடி குழந்தைகளுக்கு ரூ.62,000 கோடி
அங்கன்வாடி ஊழியர்களின் மாத கவுரவ தொகை 15,000த்தில் இருந்து 16,000 ரூபாயாகவும்; உதவியாளர்களுக்கு 8,000த்தில் இருந்து 8,750 ரூபாயாகவும் உயர்வு 'சாக் ஷமா அங்கன்வாடி' திட்டத்தின் கீழ் உள்ள 17,454 அங்கன்வாடி மையங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் வழங்க, 175 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அங்கன்வாடி கட்டடங்கள் கட்டுவதற்கு, 10 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற வளர்ச்சி துறையிடம் இருந்து பாதி விலைக்கு நிலம் வாங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார நிலை பற்றி அறிந்து தேவையான உதவிகள் வழங்கல் மைசூரு, பெலகாவியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளிகள் 5 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். இதை என்.ஜி.ஓ., நிறுவனங்கள் பராமரிக்கும் ஆட்டிசம் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்போருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் பல்லாரி அரசு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர் பள்ளி; ஹூப்பள்ளி பார்வையற்ற மாணவர் பள்ளி ஆகியவை உயர் கல்வி நிலைக்கு உயர்த்தப்படும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரிப்பு மாநில மானிய உதவியின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளியில் பயில்வோருக்கான மாத உணவு உதவித் தொகை 1,750 ரூபாயாக அதிகரிப்பு பெண்களை மையமாக கொண்ட திட்டங்களுக்கு மொத்தம், 94,084 கோடி ரூபாய் ஒதுக்கீடு குழந்தைகளை மையமாக கொண்ட திட்டங்களுக்கு மொத்தம், 62,033 கோடி ரூபாய் ஒதுக்கீடு.