வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேட்டோ கூட்டணி நாடுகள் தைரியம் இல்லாதவை - அதுமட்டுமல்ல ரஷியாவுடன் ஒப்பிட்டால் சிறிய நிலப்பரப்பு. மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து என்பதை புரிந்து கொள்ளாமல் வாலாட்டுகிறார்கள்.
கீவ்: உக்ரைனின் போல்டாவா நகரின் மீது ரஷ்யா நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயமடைந்தனர்.ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும், 'நேட்டோ' அமைப்பில் சேர உக்ரைன் முடிவெடுத்திருந்தது. இதை கண்டித்து உக்ரைன் மீது கடந்த 2022ல் ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனின் மத்திய நகரமான போல்டாவா மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இங்கு ராணுவ தகவல்தொடர்பு கல்வி நிறுவனம் உள்ளது.அங்கு நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பலர் குழுமியிருந்தனர். அந்த சமயத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தாக்குதல் குறித்து சில நிமிடங்களுக்கு முன்னரே தகவல் தெரிந்ததால் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முன் தாக்குதல் நடந்துவிட்டது. இதில் ராணுவ கல்வி நிறுவன கட்டடத்தின் ஒரு பகுதியும், அருகில் இருந்த மருத்துவமனை கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இந்த மோசமான தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயமடைந்தனர்.பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பதில் சொல்லியே தீர வேண்டும். போர் சமயத்தில் அதிகம் பேரை திரட்டி நிகழ்ச்சி நடத்தியது குறித்தும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நேட்டோ கூட்டணி நாடுகள் தைரியம் இல்லாதவை - அதுமட்டுமல்ல ரஷியாவுடன் ஒப்பிட்டால் சிறிய நிலப்பரப்பு. மொத்த ஐரோப்பாவுக்கும் ஆபத்து என்பதை புரிந்து கொள்ளாமல் வாலாட்டுகிறார்கள்.