| ADDED : மே 03, 2024 11:26 PM
பீதர் : ''பீதர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே அனுபவம் இல்லாதவர். சிறுவன். புத்தக பையுடன் அவரை பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஒருவர் தேவை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கிண்டல் செய்தார்.பீதரில் நேற்று அவர் கூறியதாவது: பீதர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே, அனுபவம் இல்லாதவர். அவர் வெற்றி பெற்றால், ஸ்கூல் பேக், புத்தகங்களை எடுத்துக் கொண்டு, அவரை அழைத்துச் செல்ல ஒருவர் வேண்டும். நாட்டுக்கு அரசியலமைப்பை கொடுத்த அம்பேத்கரை, தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ். இவருக்கு 'பாரத ரத்னா' விருது கொடுக்கவில்லை. அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கியது பா.ஜ., தான். இவர் காலமானபோது, நல்லடக்கம் செய்ய காங்கிரஸ் இடம் கொடுக்கவில்லை.'நான் உயிருடன் உள்ள வரை, அரசியல் அமைப்பை மாற்ற விடமாட்டேன்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டில் மோடி என, கோஷமிடுகின்றனர். யாராவது ராகுல் என, கோஷமிடுகின்றனரா. 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு, நாட்டுக்காக என்ன செய்தது. மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. ராகுல் நாட்டை விட்டுச் செல்வது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.