உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் சுட்டெரிக்குது வெயில் ஒரே நாளில் மூவர் பலி

கேரளாவில் சுட்டெரிக்குது வெயில் ஒரே நாளில் மூவர் பலி

திருவனந்தபுரம்:கேரளாவில் வெயில் சுட்டெரித்துவருகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். கோட்டயம் அருகே வைக்கம் தாளையோல பறம்பை சேர்ந்தவர் ஷமீர் 35. இவர் நேற்று முன்தினம் வைக்கம் கடற்கரையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.பாலக்காடு மாவட்டம் மன்னார் காட்டைச் சேர்ந்த சபரீஷ் 27. நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார்.பாலக்காடு தென்கரைப்பகுதியைச் சேர்ந்த சரோஜினி 56. அப்பகுதியில் பஸ்சிற்காக காத்து நின்றபோது மயங்கி விழுந்து இறந்தார். இவ்வாறு கேரளாவில் வெப்ப அலைக்கு ஒரே நாளில் மூன்று பேர் இறந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக மதியம் 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை தொழிலாளர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ