உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்ரெட் சிங்காரம்!

சீக்ரெட் சிங்காரம்!

ஓவரா ஆட்டம்!துணை முதல்வரு சிவா தம்பி சுரேஷ், எம்.பி.,யா இருந்த அப்போ, அதிகார தொனியில பேசாத பேச்சு இல்ல. யாரா இருந்தாலும் மரியாத குறைவா பேசுறது. அதிகாரிகள ஒருமையில திட்டுறதுன்னு ஆட்டம் ஓவரா போச்சு. லோக்சபா தேர்தல்ல பெங்களூரு ரூரல் மக்கள், ஆப்பு அடிச்சி விட்டதுல இருந்து, மனுஷன் இருக்குற இடம் தெரியாம போயிட்டாரு. சமீபகாலமா அவர பத்தி எந்த தகவலும் இல்லை. ஊடகத்தினரை கூட சந்திக்கல. ஓவரா ஆட்டம் போட்டா இது தான் நிலைமைன்னு, எதிர்க்கட்சிக்காரங்க கிண்டல் பண்றாங்க.கப்சிப் எம்.எல்.ஏ.,க்கள்! மத்திய அமைச்சர் குமரண்ணரு எம்.எல்.ஏ., பதவி ராஜினாமாவால, புல்லுக்கட்டு கட்சியோட எம்.எல்.ஏ.,க்கள் பலம் 18 ஆக குறைஞ்சு இருக்கு. இருக்குற 18 பேரும் எதுவும் வாய்திறந்து பேசுறதே இல்ல. கட்சி சார்புல குமரண்ணரு, அவரு மகன் சினிமாகாரரு மட்டும் தான் பேசிட்டு வர்றாங்க. புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்கள் அவர்களின் தொகுதி பக்கமும் போறதே இல்லையாம். அரசு நிதி ஒதுக்காததுனால, தொகுதியில வளர்ச்சி பணிகள் நடக்கல. மக்கள் முகத்துல எப்படி போய் முழிப்போம்னு கேட்குறாங்களாம்.சண்டை எப்போ தீரும்!கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருக்கும், அவரோட கட்சிக்காரரான எலஹங்காகாரருக்கும், இரண்டு பேர்ல யார் பெரியவங்கன்னு சில மாதமாக போட்டி இருக்கு. இரண்டு பேரும் இப்போ பேசுறது கூட இல்ல. சமீபத்துல எலஹங்காகாரர் மகளுக்கும், அமைச்சர் மகனுக்கும் திருமண நிச்சயம் நடந்தது. முதல்வரு, துணை முதல்வர தேடி போய், எலஹங்காகாரர் அழைப்பிதழ் கொடுத்தார். ஆனா சொந்த கட்சிக்காரரான எதிர்க்கட்சி தலைவர அழைக்கல. இவங்க இரண்டு பேரு சண்டை எப்போ தான் தீருமோன்னு, கட்சிக்காரங்க புலம்பிட்டு இருக்காங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ