உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விநாயகர் சதுர்த்தியில் பாதுகாப்பு பெஸ்காம் விதிமுறைகள் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியில் பாதுகாப்பு பெஸ்காம் விதிமுறைகள் அறிவிப்பு

பெங்களூரு, : ''விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதுடன், பாதுகாப்புக்கும் பொது மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என பெஸ்காம் விண்ணப்பம் அழைத்துள்ளது.இது குறித்து, பெஸ்காம் வெளியிட்ட அறிக்கை:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து அமர்த்தி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். இம்முறையும் கொண்டாட தயாராகின்றனர். இவர்களுக்காக பெஸ்காம் சில விதிமுறைகள் வெளியிட்டுள்ளது. இதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

மின் இணைப்பு

பொது இடங்களில் விநாயகர் சிலை அமர்த்தி, பண்டிகை கொண்டாடுவோர் தற்காலிக மின் இணைப்பு பெற, அந்தந்த துணை பிரிவு அதிகாரிகளை, தொடர்பு கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தாமதமின்றி தற்காலிக மின் இணைப்பு அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துணைப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பண்டிகை கொண்டாடுவதுடன், பாதுகாப்புக்கும் பொது மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்கு, மின் விளக்கு அலங்காரம் செய்ய பெஸ்காம் ஒத்துழைப்பு அளிக்கும். பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் போதும், சிலை கரைப்பின் போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மின் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும்.தற்காலிக மின் இணைப்புக்கு, விண்ணப்பிக்கும் போது, பெங்களூரு மாநகராட்சி, பி.டி.ஏ., கிராம பஞ்சாயத்து, போலீஸ் நிலையத்திடம் தடையில்லா கடிதம் பெற்றிருக்க வேண்டும்.விநாயகர் சிலை அமர்த்தப்படும் இடங்களை, பெஸ்காம் பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வர். பந்தல், சிலை அமர்த்தும் இடம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவர். அதன்பின் தற்காலிக மின் இணைப்பு அளிப்பர். நிகழ்ச்சி முடிந்த பின், பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகள்

l விநாயகர் சதுர்த்திக்கு, தோரணம், பந்தல், சீரியல் விளக்குகள் பொருத்துவதற்கு முன், மின் கம்பிகளை சரியாக கவனிக்க வேண்டும்.l சீரியல் மின் விளக்குகளின் கம்பிகள், சரியாக இன்சுலேட் ஆகியுள்ளதா என்பதை, பரிசோதித்து கொள்ளுங்கள்.l மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளில், பந்தல், ஷாமியானாவை கட்டாதீர்கள்.l விநாயகர் ஊர்வலத்தின் போது, சாலை ஓரங்களில் உள்ள மின் கம்பிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மின் கம்பிகளை மேலே துாக்க முயற்சிக்காதீர்கள். ஊர்வலம் நடக்கும் பாதைகள் குறித்து, முன் கூட்டியே பெஸ்காம் அதிகாரிகளிடம், தெரிவிக்க வேண்டும்.l ஒயர்கள், மின் கம்பிகளில் தீப்பொறி தென்பட்டால், உடனடியாக 1912 சஹாயவாணியை தொடர்பு கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி