உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை

மேற்கு வங்க கவர்னர் மீது பாலியல் புகார் கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை

கோல்கட்டா, மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தற்காலிக பெண் பணியாளர் அளித்த புகாரை அடுத்து, கவர்னர் மாளிகைக்குள் போலீஸ் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார்.இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார்.இது குறித்த தகவல் வெளியானதும், திரிணமுல் காங்.,கை சேர்ந்த மாநில நிதித்துறை இணையமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி கவர்னர் மாளிகையில் வந்து இரவு தங்க உள்ள நாளில் அங்கு நடக்கும் சம்பவங்கள் வியப்பாக உள்ளது,'' என, தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள கவர்னர் ஆனந்த போஸ், ''கட்டுக்கதைகளால் என்னை அச்சுறுத்த முடியாது. என்னை அவமானப்படுத்தி தேர்தலில் பலன் அடைய நினைப்பவர்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உண்மை வெல்லும். எத்தனை வழக்கு வேண்டுமானாலும் பதியட்டும்; சட்டப்படி சந்திக்க தயார்,'' என, நேற்று முன்தினம் தெரிவித்தார்.இந்நிலையில், கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கவர்னருக்கு எதிராக அவதுாறு மற்றும் அரசியல்சாசனத்துக்கு எதிரான குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, மாநில நிதித்துறை இணை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா மற்றும் மாநில போலீசார் கவர்னர் மாளிகைக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் பங்கேற்க மாட்டார். அமைச்சருக்கு எதிரான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை