உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் புகார்: மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்

பாலியல் புகார்: மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கவர்னர் ஆனந்த போஸ் மீது பெண்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.மேற்கு வங்கத்தில், கவர்னருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார். கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டை கவர்னர் ஆனந்த போஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, சிறப்பு புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பெண்கள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, மேற்கு வங்க கவர்னர் மாளிகை ஊழியர்கள் 4 பேருக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பி உள்ளது. சம்மனில் மேற்கு வங்க மாநிலத்தில் ஹரே தெரு போலீஸ் ஸ்டேஷனில் 4 பேரும் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

GMM
மே 04, 2024 17:34

கவர்னர் மாளிகை உள் நுழைய காமிரா கைப்பற்ற, சம்மன் அனுப்ப போலீசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது மத்திய அரசு, நீதிமன்றம் இதில் அமைதி காப்பது ஆபத்து புகாரை எல்லோரை விசாரிப்பது போல், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், ராணுவத்தினரை எளிதில் விசாரிக்க முடியாது அரசியல் செய்ய அறிவாலயம் கிடையாது கவர்னர் அலுவலகம் பாதுகாக்கபட்ட இடம் மிக முக்கிய ரகசிய தகவல் இருக்கும் இடம் இப்படி அதிகாரம் இருந்தால், பொய் புகார் கூறி முக்கிய ஆவணத்தில் கையெழுத்து வாங்க முடியும் எடுத்து, எதிரிக்கு கொடுக்க முடியும் இந்திய பிரிட்டிஷ் ஆட்சியில் உயர் அதிகாரி மற்றும் அவர் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மீது போலீசார் போன்ற கீழ் நிலை அதிகாரி கடிதம் கூட எழுதுவது நிர்வாக குற்றம்


rama adhavan
மே 04, 2024 18:58

விசாரணையை முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும் காவல் நிலைய வீடியோ பதிவுகளும் முழுமையாக பாதுக்காகப் பட வேண்டும்


Arumugam Saravanan
மே 04, 2024 21:27

கவர்னர் பெண் மானபங்கம் புகார் இந்த இவர் சப்போட்டா உன் குடும்ப இருந்தால் நீ சப்போட்டா பன்னுஇது ஜனநாயக நாடு சட்டம் அனைவரும் சமம்


MADHAVAN
மே 04, 2024 17:24

தப்பு செஞ்சவன் உண்மையா ஒத்துக்குவாங்க? உண்மையா மட்டுமில்ல எல்லாத்தையும் சொல்வார்!


rama adhavan
மே 04, 2024 18:54

இந்த தத்துவம் அருமை அனைவருக்கும், இங்குள்ள ஆளும் கட்சியினரும் அதன் கூட்டணி உட்பட அனைவருக்கும் பொருந்தும் அல்லவா? பதில் சொல்லவும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி