உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

லூதியானா:பஞ்சாப் மாநிலத்தில், பேக்கரி உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீசார் தேடுகின்றனர்.லூதியானா ராஜகுரு நகர் மார்க்கெட்டில் பேக்கரி நடத்துபவர் நவீன் குமார் சிந்தி. நேற்று காலை வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, முகமூடி அணிந்து ஸ்கூட்டரில் வந்த இருவர், நவீன்குமாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர்.பக்கத்து கடைக்காரர்கள் நவீன் குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ் உதவி ஆணையர் குர்தேவ் சிங் கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த நவீன் குமார் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். எதற்காக அவரை சுட்டனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. குற்ற்வாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை