உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையாவின் விசுவாசி ரமேஷ் ஜார்கிஹோளி தடாலடி

சித்தராமையாவின் விசுவாசி ரமேஷ் ஜார்கிஹோளி தடாலடி

பெலகாவி: ''தனிப்பட்ட முறையில் முதல்வர் சித்தராமையா எங்கள் தலைவர். நான் அவரது விசுவாசி,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் கூறியதாவது:கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், வாக்குறுதி திட்டங்களின் பெருமையில் மிதக்கின்றனர். ஒரு கி.மீ., சாலையை மேம்படுத்த சித்தராமையா அரசால் முடியவில்லை.இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக தொகுதிகளை கைப்பற்றும். தேர்தல் முடிந்த பின், மாநிலத்தில் அரசு மாற்றம் நிகழும். மத்தியில், மாநிலத்தில் டபுள் இன்ஜின் அரசு இருந்தால், வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். காங்கிரஸ் அரசு வாக்குறுதி திட்டங்களின் அலையில் மிதக்கிறது.முதல்வர் சித்தராமையா, முன் போன்று இல்லை. அவரிடம் கொள்கை, சித்தாந்தம் இல்லை. அரசில் உள்ளவர்களிடம் பேசும் சூழ்நிலையில் அவர் இல்லை. தனிப்பட்ட முறையில் சித்தராமையா எங்கள் தலைவர். நான் அவரது விசுவாசி.இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடகாவில் காங்., - ம.ஜ.த., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட 17 பேர், 2019ல் ராஜினாமா செய்து பா.ஜ.,வில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி