உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரஜ்வல் ரேவண்ணாவை துாக்க காத்திருக்கும் எஸ்.ஐ.டி., குழு

பிரஜ்வல் ரேவண்ணாவை துாக்க காத்திருக்கும் எஸ்.ஐ.டி., குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய எம்.பி., பிரஜ்வல், ஜெர்மனியில் இருந்து இன்று நள்ளிரவு பெங்களூரு வருகிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய, சிறப்பு புலனாய்வு குழுவினர் காத்திருக்கின்றனர்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், ஹாசன் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவர், சில பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்கள் கடந்த மாதம் வெளியானது.இதையடுத்து, கடந்த மாதம் 27ம் தேதி பிரஜ்வல் ஜெர்மனி சென்று விட்டார். பிரஜ்வல் மீது மூன்று பலாத்கார வழக்குகள், ஒரு பாலியல் தொல்லை வழக்கு பதிவாகி உள்ளது. வழக்கு, சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.உடனே நாடு திரும்பி, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகும்படி பிரஜ்வலுக்கு, அவரது தாத்தா தேவகவுடா, சித்தப்பா குமாரசாமி ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நாளை 31ம் தேதி ஆஜராவதாக பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து இன்று மதியம் கிளம்பும் பிரஜ்வல், நள்ளிரவு 12:30 மணிக்கு, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் வருகிறார். அவரை, விமான நிலையத்திலேயே கைது செய்ய, சிறப்பு புலனாய்வு குழுவினர் காத்திருக்கின்றனர்.

முன்ஜாமின் மனு

இதற்கிடையில், தன் மீது பதிவான மூன்று பலாத்கார வழக்குகளிலும் முன்ஜாமின் கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் வக்கீல் அருண் மூலம், பிரஜ்வல் நேற்று மதியம் மனு செய்தார். நீதிபதி சந்தோஷ் பட், நாளை விசாரிப்பதாக கூறினார்.ஆனால், 'இன்று நள்ளிரவு பிரஜ்வல் வந்து விடுவார் என்பதால், விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும்' என்று, வக்கீல் அருண் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, பதில் தர சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், நேற்று மனு மீது விசாரணை நடக்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் பிரஜ்வல் கைதாவது உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

முருகன்
மே 30, 2024 07:13

தாத்தா சித்தப்பா சொன்னால் ஆஜர் ஆவார் காவல் துறை சொன்னால் வரமாட்டார் ? கடும் தண்டனை வழங்க வேண்டும்


Raa
மே 30, 2024 10:49

உண்மை. சட்டம் அனைவருக்கும் சமம் என்று பீத்திக்கொள்ளும் நிலைவேறு. மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு சட்டமாம்... மதம் பொறுத்து ஒரு சட்டமாம்.... என்னப்பா நடக்குது இங்க? தவறு செய்தால் மனுநீதி சோழன் தண்டனை வழங்கவேண்டும் தாத்தாவும் சித்தப்பாவும். அதைவிட்டுவிட்டு ஜாமீனுக்கு பிச்சை கேட்பது அழகல்ல.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை