மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
5 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
6 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
துமகூரு : ஷிவமொகா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார், துமகூரு மடத்துக்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.இந்த தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராகவேந்திரா, சுயேச்சை வேட்பாளராக ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார். கீதா வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. இவரை வெற்றி பெற வைக்க, காங்கிரஸ் தலைவர்கள் போராடுகின்றனர். தன் மனைவியை எம்.பி.,யாக பார்க்க வேண்டும் என, நடிகர் சிவராஜ்குமார் உறுதி பூண்டுள்ளார். உடல்நிலையை பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்கிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், கீதா பல்வேறு மடங்கள், கோவில்களில் தரிசனம் செய்கிறார். நேற்று காலை துமகூரின், சித்தகங்கா மடத்துக்கு கீதா சிவராஜ்குமார் தம்பதி வருகை தந்தனர். சிவகுமார சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர். மடாதிபதி சித்தலிங்க சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.பின் கீதா கூறியதாவது:ஷிவமொகாவில் பிரசாரம் சிறப்பாக நடக்கிறது. மாவட்ட மக்கள் என்னைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோன்று காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்கள், அனைத்து பிரிவினருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் சிவகுமாரின் எண்ணம் நிறைவேறும்.ஷிவமொகாவில் பல பிரச்னைகள் உள்ளன. குடிநீர் பிரச்னை, சாலை, சாக்கடை உட்பட, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.என் மனைவி கீதா அரசியலுக்கு வந்து, ஷிவமொகா தொகுதியில் காங்., வேட்பாளராக போட்டியிடுகிறார். மாவட்ட மக்களிடம் எங்களுக்கு ஆதரவு கிடைத்துஉள்ளது. ஒரு கணவனாக என் மனைவிக்கு ஆதரவாக நிற்பது, என் கடமை. இம்முறை தேர்தல் முடிவு. கீதாவுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன்.- சிவராஜ்குமார், நடிகர்
5 hour(s) ago | 7
6 hour(s) ago | 1
6 hour(s) ago | 8