உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்கு ஆசியா பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவி அவசியம்; சொல்கிறார் இஸ்ரேல் துாதர்

மேற்கு ஆசியா பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவின் உதவி அவசியம்; சொல்கிறார் இஸ்ரேல் துாதர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்தியாவின் உதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்தியாவிற்கான இஸ்ரேல் துாதர் ருவென் அசார் கூறினார்.டில்லியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து, ருவன் அசார் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இப்பிரச்னைகளை தீர்ப்பதற்கு இந்தியாவின் பங்கு அவசியம். முதலில், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிப்பது, முக்கிய பணியாக நான் கருதுகிறேன். இஸ்ரேலில், நாட்டிற்கு எதிராக இருக்கும் அச்சுறுத்தல்களை போக்க வேண்டும். அவற்றில்தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த அச்சுறுத்தல்களை களைந்து வெற்றி பெற வேண்டும். அதுவே அனைவரும் விரும்பும் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். இதற்கு இந்தியாவின் உதவி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதால், நிர்வாக மாற்றங்கள், கொள்கை மாற்றங்கள் ஏற்படும். அது அமெரிக்கவின் அரசியல் வளர்ச்சி. ,ஏற்கனவே அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக இருந்த போது அவர்களின் செயல்பாடு குறித்து இஸ்ரேலுக்கு ஏற்கனவே நன்கு தெரியும். தற்போது மீண்டும் டிரம்புடன் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறோம். டிரம்ப் நிர்வாகத்தின் போது, ​​மத்திய கிழக்கில், குறிப்பாக ஆபிரகாம் உடன்படிக்கையில் நிறைய சாதனைகள் எட்டப்பட்டன. அதன் விரிவாக்கத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இவ்வாறு அசார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.V. Iyer
நவ 08, 2024 04:48

இந்திய அரசும், அமைதியை விரும்பும் எல்லா ஹிந்துஸ்தானியர்களும் இஸ்ரேல் பக்கம். கவலைப்படாதீர்கள். எல்லா பயங்கரவாதிகளையும் ஒழிக்கப்பாடுபடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.


ஜுபிடர் வாசு
நவ 07, 2024 22:04

நாங்க போருக்கான நேரம் இதுவல்லன்னு சொன்னா கேட்டு நிறுத்திடவா போறீங்க? நாங்கதான் ஐ.நா வாக்கெடுப்பில் பங்கெடுக்காம ஆதரவு தர்றோமே. தளவாடம் இருக்கு வாங்கிக்கறீங்களா?


Ramesh Sargam
நவ 07, 2024 19:52

எல்லோரும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை