மேலும் செய்திகள்
-மனைவி மீது ஆத்திரத்தில் மகனை கொன்றவர் கைது
04-Aug-2024
கதக்: 'மகனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் கூறியதால், தாயை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.கதக் டவுன் தாசரஓனியில் வசித்தவர் சாரதா அகடி, 85. இவரது மகன் சித்தலிங்கப்பா, 43. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கணவரை இழந்த சாரதா, மகனுடன் வசித்தார்.நேற்று முன்தினம் இரவு சித்தலிங்கப்பாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, “என் மகனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. அவனிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்,” என, கேட்டுள்ளார்.இதனால் கோபம் அடைந்த சித்தலிங்கப்பா, “எனக்கு பைத்தியம் பிடித்துள்ளது என்று எப்படி கூறுவாய்?” என கேட்டு, தாயிடம் தகராறு செய்தார். பின், தாயின் தலையை பிடித்து கட்டிலில் முட்டினார்.இதில், பலத்த காயம் அடைந்த சாரதா பரிதாபமாக இறந்தார். நேற்று காலை தனது சகோதரிகளுக்கு போன் செய்த சித்தலிங்கப்பா, அம்மா இறந்து விட்டார் என்று கூறினார். அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சாரதா இறந்து கிடந்தார். சித்தலிங்கப்பாவை, கதக் டவுன் போலீசார் கைது செய்தனர்.
04-Aug-2024