மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் இஸ்ரோ!
8 hour(s) ago | 7
ஹாக்கி வீரர் ஹர்திக் சிங்கிற்கு கிடைக்குமா கேல் ரத்னா விருது
9 hour(s) ago | 1
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்புக்கு இந்தியா கண்டனம்
9 hour(s) ago | 9
பெங்களூரு : கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் வகையில், வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியும், தானியங்கி கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்க, பெங்களூரு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலைய சாலையில், வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பல உயிரிழப்பும் ஏற்படுகின்றன. இளைஞர்கள் சிலர் வீலிங் உள்ளிட்ட பைக் சாகசங்கள் செய்கின்றனர். இதனாலும் விபத்துகள் நடக்கின்றன.எவ்வளவு தான் கண்காணிப்பு இருந்தாலும், விபத்துகள் நடப்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றன. 2024 ஏப்., 30ம் தேதி வரையிலான புள்ளி விபரங்களின்படி, இச்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.விபத்துக்கு அதிவேகமே காரணம் என கண்டறியப்பட்டு உள்ளது. இதைத் தவிர்க்க, பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர்.இந்த சாலையில் 80 கி.மீ.,க்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறியும் வகையில் 'தானியங்கி கேமராக்கள்' பொருத்தப்பட்டு உள்ளன.குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்க முன்வந்துள்ளனர்.
8 hour(s) ago | 7
9 hour(s) ago | 1
9 hour(s) ago | 9