அரசு பணிகளில் பழங்குடியினர் நேரடியாக சேர்க்க நடவடிக்கை
பழங்குடியினர் நல துறைக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் 3,67,281 மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க, கடந்த ஆண்டை போலவே 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் சமூகத்தின் 12 உட்பிரிவை சேர்ந்தோருக்கு, சத்தான உணவு வழங்க 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு இந்த நிதி ஆண்டில் 78 பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில், ஏழாம் வகுப்பு துவங்கப்படும். சாம்ராஜ்நகர், குடகு, மைசூரில் ஐந்து பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை உள்ளது. பி.யு.சி., வரை தரம் உயர்த்தப்படும் பழங்குடியினர் சமூக மாணவர்களுக்காக புதிதாக 20 விடுதிகள் துவங்கப்படும் சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய சமூகத்தை சேர்ந்த பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்டவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு சோலிகா, ஹலசா, ஜெனுகுருபா, கவுடலு, சித்தி, குடியா, மலேகுடியா, காடுகுருபா, இருளர், கோரகா, பெட்டகுருபா, எரவா, பனியா ஆகிய 13 பழங்குடியின சமூகத்தினரை, அரசு பணியில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை.