உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து, மாணவர் அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மருத்துவ கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது. அப்போது பீஹார் மற்றும் ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் வந்தன. இதன் பின்னர், தேர்வு முடிவுகள் வெளியானபோது, நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில், 1500 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rp2ccvtn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மே மாதம் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மாணவர் அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 11) விசாரித்தது. அப்போது, மருத்துவ கவுன்சிலிங் நடத்த இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

நோட்டீஸ்

இந்த வழக்கில், பதில் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு மீதான விசாரணை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Anand
ஜூன் 11, 2024 15:27

நீதிமன்றத்திற்கு வேறு வேலையே இல்லை இது போல வெட்டி கேஸ்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாங்கு மாங்கு என விசாரணை செய்கிறது,


GMM
ஜூன் 11, 2024 15:03

நீட் தேர்வுக்கு முன் தனியார் கோடியில் நன்கொடை பெற்ற போது, பொது நலம் உதிக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் அரசிடம் அறிமுகம் இல்லாமல், வழக்கறிஞரிடம் அறிமுகம் ஆகும் மாணவ அமைப்பினர் யார்? மாற்று ஏற்பாடு கருத்து என்ன? ஏலம், குலுக்கல், விருப்பம் போல் தேர்வு. இதற்கு பதில் அளிக்காமல் NTA இருப்பது நல்லது. இவ்வாறு பொது மக்கள் கோடி வழக்கு தொடர முடியும். நிர்வாகம் 24×7 பணி செய்தாலும் வழக்கறிஞர்களை வெல்ல முடியாது. நீதிமன்றம் சட்ட விதி மீறலை நிவர்த்தி செய்யும் இடம். திராவிடம் கூறும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தவறு. குற்றவாளிகள் மட்டும் தான் சட்டம் முன் சமம் என்கின்றனர் பெரியோர்கள்.


Kasimani Baskaran
ஜூன் 11, 2024 14:57

கூடுதலாக நாலு பேர் குதித்தால் நீதிமன்றம் என்ன உடனே தடை செய்து விடுமா? நீட்டை நீக்குவது சாத்தியமில்லாத ஒன்று. தீம்க்கா கல்வித்தந்தைகள் நடந்தும் மருத்துவக்கல்லூரிகளில் இலவசமாக இடம் கொடுத்தால் நீட் தேவையில்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 12:51

கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தான் கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. பத்து லட்சம் பேருக்கு மேல் தேர்வெழுதும்போது ஒரே மதிப்பெண்ணை பலர் பெறுவது இயற்கையே.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 11, 2024 12:43

எதிர் கட்சிகளின் சதி ...


Ramesh Sargam
ஜூன் 11, 2024 12:33

தேவையில்லாமல் மாணவர்களின் படிப்பில், படிப்பு விஷயத்தில் தலையிடுவதில் இருந்து அரசியல்வாதிகள் ஒதுங்கி இருக்க வேண்டும். அது நாட்டுக்கு நன்மை பயக்கும். அரசியல்வாதிகளுக்கும் நன்மை பயக்கும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ